Pages

Monday, February 25, 2013

புலிகளுக்கு ஆதரவாகவும்: இலங்கைக்கு எதிராக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன!

Monday, February 25, 2013
இலங்கை::சில வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறைந்தபட்சம் இலங்கைக்கு எதிராக எட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத கைதுகள், ஊடக சுதந்திர ஒடுக்குமுறைமை, நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் விளைவித்தல், யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தாமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment