Pages

Monday, February 25, 2013

இலங்கை இந்தியாவுக்கிடையிலான நட்புறவை இல்லாமல் செய்ய சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா!

Monday, February 25, 2013
இலங்கை::இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் நட்புறவு மற்றும் சகோதரத்துவத்தை இல்லாமல் செய்ய இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள சில தரப்பினர் செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இந்தியாவை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளமையான இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் அதில் கலந்து கொண்ட உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிக நீண்டகாலமாக இருந்து வரும் உறவாகும். இந்த உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்துவது இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment