Pages

Saturday, February 16, 2013

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கோரிக்கைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்பு!

Saturday, February 16, 2013

இலங்கை::இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையை வரவேற்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

நம்பகரமானதும், பக்கச்சார்பற்றதுமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அண்மைய அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இன்னமும் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பது தெளிவாகியுள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் யுத்த வலய மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முனைப்புக்கள் போதுமானதல்ல என குறிப்பிட்டுள்ளது.பாரியளவு மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் எந்த வகையிலும் போதுமானதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கிய தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment