Pages

Wednesday, February 20, 2013

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது!

Wednesday, February 20, 2013
இலங்கை::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.

2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இறதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment