Saturday, February 16, 2013
இலங்கை::ஆரோக்கியமான தலைமுறைக்காக இராணுவத்தினரின் பங்களிப்பு!
நாட்டில் நிலவிய அசாதாரன சூழ்நிலை முடிவுக்கு வந்தமையினால் வடபகுதியில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்திப்பணிகளே அங்கு உருவாகும் மறுமலர்ச்சிக்குச் சான்றாகும். மூன்று தசாப்தங்களாக நிலவிய உள்ளூர் யுத்தமும் அதனால் ஏற்பட்ட வலிகளும் வடுக்களும் மறைந்து தற்போது மக்கள் நிம்மதியாக சமாதானக்காற்றை சுவாசிக்கின்றனர். அரசின் நல்லிணக்கத் திட்டத்துக்கமைய, மக்கள் தமது வாழ்க்கையை சிரமமின்றி மேற்கொள்ள இராணுவத்தினர் பாரிய மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நெல்லியடி மாணவர்களுக்கான பற்சிகிச்சை:-
கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி இராணுவத்தினரின் 521 ஆம் படைப்பிரிவும் சுகாதாரசேவைகளுக்கான பிராந்திய பணிப்பாளரும் இணைந்து நெல்லியடியில் பற்சிகிச்சை முகாமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 175 க்கும் அதிகமான சிறுவர்கள் பற்சிகிச்சையைப் பெற்றதுடன் விசேட மருத்துவர்களால் இச்சேவை வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். இச்சிகிச்சை முகாமின்போது விசேட சிகிச்சைகளுக்காக மந்திக்கை, கரவட்டி போன்ற மருத்துவ முகாமுக்கும் சிலர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஹெலம்பாவெவ கிராம மக்களுக்கான மருத்துவ உதவி:-
ஹெலம்பாவெவ பிரதேசத்தில் ஜனகபுர கிராம சேவகர் பிரிவில் ‘சக்ஸஸ்’-கொழும்பு எனும் அமைப்பினால் நடமாடும் மருத்துவ முகாமொன்று முன்னுக்கப்பட்டது. இதில் அதிகமான மக்கள் மருத்துவ சேவையையும் மருந்துகளையும் பெற்றுக் கொண்டனர். திருமதி அனுலா விஜேசுந்தர தலைமையிலான ஏழு பேர் கொண்ட வைத்தியக்குழு சிகிச்சைகளை வழங்கியதுடன் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப்புத்தகங்களும் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். இம்முகாமானது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 622ஆம் மற்றும் 62ஆம் படைப்பிரிவினரால் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




No comments:
Post a Comment