Pages

Saturday, February 16, 2013

இலங்கை::தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் ஆட்சி அமைக்க முடியாது: ஜெயலலிதா!


Saturday, February 16, 2013
சென்னை::தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளை குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினையில் காங்., பாஜ., கட்சிகள் கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்படுகின்றன. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு தொடர்ந்து தாமதம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதுப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தே 66 டி.எம்.சி காவிரி நீரைப் பெற்றுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment