Pages

Wednesday, February 20, 2013

பிரபாகரன் மகன் கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்: (புலி ஆதரவு தீவிரவாதி) திருமாவளவன் எம்.பி. வற்புறுத்தல்!

Wednesday, February 20, 2013
சிதம்பரம்::விடுதலை சிறுத்தைகள் தலைவர்  (புலி ஆதரவு தீவிரவாதி)திருமாவளவன் எம்.பி. சிதம்பரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

பிரபாகரன் இளையமகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரின் பிடியில் வைத்து, பின்பு சுடப்பட்டு இறந்துள்ளார். இந்த படங்கள் நாளேட்டில் வெளியாகியுள்ளது. யுத்த தர்மத்தை மீறி சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையில் சின்னஞ்சிறு பிஞ்சுகளை கூட விட்டுவைக்காமல் நசுக்கி உள்ளதையும், போர் குற்றத்தையும் தாண்டி இன அழிப்பு நடத்துள்ளதை இச்சம்பவம் உறுதி செய்துள்ளது.

இந்திய அரசு இனியும் ராஜதந்திரன் என்ற பெயரில் சிங்களர்களுக்கு துணை போவதை ஏற்றுக் கொள்ள இயலாது. வருகிற மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.

ஐ.நா. சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும். வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபட்சே இந்தியா வர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துவேன். இதுகுறித்து பிரதமரை சந்தித்து மனு அளிப்பேன்.

தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் காப்பீடு திட்டத்தின் நிதி 90 விழுக்காடும், அரசு நிதி 5 விழுக்காடும் என அறிவித்துள்ளது. இதனால் 49 விழுக்காடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய கூலித் தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரமும், தரிசாக போட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும்.

மார்ச் 4ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் தமிழர் ஒற்றுமை பேரணி நடத்தப்படவுள்ளது. தருமபுரி வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் தோறும் சாதிய அமைப்புகள் என்ற பெயரில் ஒன்று சேர்ந்து அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றனர்.

ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக தமிழ் சமூகம் போராடி வரும் வேளையில் அதை சீர்குலைக்கும் வகையில் சாதிய வெறியை தூண்டி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர்.

சிதம்பரம் அருகே நந்தீஸ்வரமங்களத்தில் இடிமின்னல் தாக்கி இறந்த சத்யா குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமுற்ற மூவருக்கு தலா ரூ.1 லட்சமும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூர் மாவட்டம் பணங்காட்டு காலனியில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து செல்ல முடியாமல் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அம்மக்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரபாகரன் மகன் கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்: (புலி ஆதரவு தீவிரவாதி) திருமாவளவன் எம்.பி. வற்புறுத்தல்!

No comments:

Post a Comment