Pages

Wednesday, February 20, 2013

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை எதிரொலி: சென்னை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது புலிகளின் விசுவாசிகள் தாக்குதல்!

Wednesday, February 20, 2013
சென்னை::பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட புகைப்படங்களை சேனல் 4 வெளியிட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் புலிகளின் விசுவாசிகளால் தாக்கப்பட்டது.

புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேனல் 4 நேற்று வெளியிட்டது. அதில் பாலச்சந்திரன்  மணல்மூடைகள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து பிஸ்கட் போன்று ஏதோ சாப்பிடுகிறார். அதன் பிறகு  அவரது மார்பில் குண்டு பாய்ந்த புகைப்படங்களைப் பார்த்த புலிவிசுவாசிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்கியுள்ளனர்

இந்த  கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புலிகளின் விசுவாசிகள்  கல் வீசித் தாக்கியுள்ளனர். இதில் அலுவலக கண்ணாடி சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று ஏர்லைன்ஸ் அலுவலகத்தார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பின் குறிப்பிட்ட 3 முதல் 4 பேர் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை எதிரொலி: சென்னை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது புலிகளின் விசுவாசிகள் தாக்குதல்!

No comments:

Post a Comment