Tuesday, February 19, 2013

மட்டக்களப்பில் வாகரை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் முன்னாள் புலி உறுப்பினர்கள்ஐந்து பேர் கைது!

Tuesday, February 19, 2013
இலங்கை::மட்டக்களப்பில் வாகரை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் முன்னாள்  புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரே இவர்களை, விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

தங்களுடைய உறவினர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் உறவினர்கள் சிலர் நேரிலும் தொலைபேசி ஊடாகவும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment