Tuesday, February 19, 2013

இலங்கையர்கள் 26 பேர் இந்தோனேஷியாவில் கைது!

Tuesday, February 19, 2013
இலங்கை::இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 26 பேர் இந்தோனேஷியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று மாலை டியூங் தீவிற்கு அருகில் கைதுசெய்யப்பட்டதாக இந்தோனேஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டியூங் தீவிற்கு அருகில் உள்ள கற்பாறையொன்றில் குறித்த குழுவினர் பயணித்த படகு விபத்திற்குள்ளானதால் அவர்கள் 12 நாட்கள் கடலில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்ததாக இந்தோனேஷிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படகு விபத்திற்குள்ளானதன் பின்னர் அதன் பணியாளர்கள் தப்பிச் சென்றதாக கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷிய பிரஜைகளால் காப்பாற்றப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்த பகுதியிலுள்ள பள்ளியொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 17 ஆண்களும் 4 பெண்களும் 5 குழந்தைகளும் அடங்குவதாக இந்தோனேஷியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment