Pages

Friday, February 22, 2013

முன்னாள் புலி உறுப்பினரான சாந்தனி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆசி பெற்றார்!

Friday, February 22, 2013
இலங்கை::கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சவின் ஒத்துழைப்புடன் வவுனியா 'சிறிலிய சவிய' புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற சாந்தனி, சர்வதேச பாடசாலையொன்றில் உயர் கல்வி கற்றவரராவார்.

இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துள்ளார்.. குறித்த முன்னாள் போராளி சாந்தினி ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் வவுனியா ‘சிரிலிய சவிய’ இல்லத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானார்.

அதன்பின்னர் சர்வதேச கல்லூரியொன்றில் உயர் கல்வி பெற்றதன் பின்னரே இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் சாந்தனி இணைந்துள்ளார்.

 வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்சவும் ஜனாதிபதியின் புதல்வரான இலங்கைக் கடற்படையின் உப லெப்டினன்ட் யோஷித ராஜபக்சவும் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment