Pages

Friday, February 22, 2013

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக இலங்கையில் பொய் பிரசாரம் - கொழும்பு நகரில் உள்ள இந்திய ஐ - கமிஷன் அறிக்கை

Friday, February 22, 2013
இலங்கை::கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து எவ்வித அணு கசிவும் ஏற்படவில்லை. அவ்வாறு வெளியானதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை' என, கொழும்பு நகரில் உள்ள இந்திய ஐ - கமிஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வரும் அணு மின் நிலைய பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. மின் உற்பத்தி, விரைவில் துவங்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, இலங்கையில், சமீப காலமாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அணு மின் நிலையத்தில் கசிவு ஏற்படுவதாகவும், கசிவு ஏற்பட்டால், முதலில் இலங்கை தான் பாதிக்கப்படும் எனவும், தவறான பிரசாரம் செய்யப்படுகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, கொழும்பு நகரில், சில நாட்களுக்கு முன், பேரணி நடத்தப்பட்டது. அதையடுத்து, அந்நகரில் உள்ள, இந்திய ஐ - கமிஷன், விளக்கம் அளித்து, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள், செயல்பட உள்ள மின் உற்பத்தி என, அனைத்தும், அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கட்டமும், பலத்த சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. எனவே, அணு கசிவு வெளியாவதாக கூறப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "இந்திய அணு உலைகளில் கிடைக்கும் கழிவுகள், அங்கேயே பத்திரமாக அழிக்கப்படும். அதிலும் எந்த சந்தேகமும் தேவையில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment