Friday, February 15, 2013
இலங்கை::பருத்தித்துறைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் நிர்க்கதியான ஐந்து மீனவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சுரனிமல கப்பலினால் குறித்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
காப்பாற்றப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த படகு பருத்தித்துறைக்கு கிழக்கே 34 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்ததாக கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
கடற்றொழில் திணக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த கடற்படையினர் அதிலிருந்த மீனவர்களை காப்பாற்றியுள்ளனர்.

No comments:
Post a Comment