Friday, February 15, 2013
நெல்லை::கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி உதயகுமார் தலைமையில் இடிந்தகரையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இது போன்ற போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் பிரான்ஸ் நாடு இந்தியாவில் குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் அணு உலைகளை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது.
குஜராத்தில் அமைக்கப்படும் அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்கோ கோலண்ட் நேற்று இந்தியா வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் இடிந்தகரையில் உதயகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது.
அப்போது பிரான்ஸ் நாட்டு கொடி எரிக்கப்பட்டது. கறுப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதைத்தொடர்ந்து போராட்டத்துக்கு தலைமை தாங்கிய உதயகுமார், மைபா.ஜேசுராஜ் உள்பட 170 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் மீது அணு உலை போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment