Friday, February 22, 2013

இந்தியா பிரபல்யமான நாடு இலங்கையோ சிறியத்தீவு இந்த இருநாடுகளுக்கும் இடையில் தீ மூட்டுவதற்கு சிலர் முயற்சி ஊடகத்துறை அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல!

Friday, February 22, 2013
இலங்கை::இந்தியா பிரபல்யமான நாடு இலங்கையோ சிறியத்தீவு இந்த இருநாடுகளுக்கும் இடையில் தீ மூட்டுவதற்கு சிலர் முயற்சிகின்றனர் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாரளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

முன்னதாக கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள்,

இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்களின் மீன் பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கு செல்கின்ற இலங்கை பக்தர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறான நிலையில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று வினவினர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இவ்வாறான விவகாரங்கள் தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான விவகாரங்களை வைத்து இருநாடுகளுக்கும் இடையில் சிலர் தீ மூட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

வடக்கில் மீன்பிடியில் எவ்விதமான வீழ்ச்சியும் ஏற்படவில்லை. அங்கு மீன்பிடி அதிகரித்திருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார் என்றார்.

No comments:

Post a Comment