Saturday, February 16, 2013
இலங்கை::இலங்கை தலைநகர் கொழும்புவில், மர்மநபர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சன்டே லீடர் நாளிதழில் பத்திரிகையாளராக இருப்பவர் ஷகதாலி. இவர் நேற்று இரவு மவுண்ட் லவினியா பகுதியில் உள்ள தனது வீட்டுப்பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள், ஷகதாலி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த ஷகதாலி, கலுபோவிலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் போது அவரது கழுத்துப் பகுதியில் காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் பராஸ் சவுகாரலி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இனந்தெரியாத நபர்கள் மூவரினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்திற்கு இழக்கான நிலையில் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

No comments:
Post a Comment