Saturday, February 16, 2013
லண்டன்::கர்ப்பிணியாக இருக்கும் இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன், கணவர் வில்லியமுடன் நீச்சல் உடையில் இருக்கும் படங்களை இத்தாலி மேகசின் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருடைய மனைவி இளவரசி கேத் மிடில்டன். நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் கேத் மிடில்டன், வில்லியமுடன் கரீபியன் பகுதியில் உள்ள ஆடம்பர ரெஸ்டாரன்டில் தங்கி உள்ளார். இங்கு நீச்சல் உடையில் மிடில்டன் இருக்கும் காட்சிகளை இத்தாலியில் இருந்து வெளிவரும் ÔசிÕ என்ற மேகசின் நேற்று வெளியிட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்து ராணி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரீபியன் கடல் பகுதியில் உள்ள மிஸ்டிக் தீவில், கடற்கரையோரம் கேத் மிடில்டன் நீலநிற நீச்சல் உடையில் நடந்து செல்வது, வில்லியமின் தோளில் சாய்ந்து செல்வது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், மிடில்டனின் வயிறு பெரிதாகி இருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த இதழ் அமெரிக்காவிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி மேகசின் சிதான் கடந்த செப்டம்பரில் மிடில்டன் பிரான்ஸ் சென்ற போது மேலாடை இன்றி இருக்கும் படங்களை வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளானது. இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

No comments:
Post a Comment