Pages

Thursday, February 21, 2013

பிரபாகரனின் மகன் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை - இலங்கைக்கான இந்திய தூதுவர் பிரசாத் காரியவசம்!

Thursday, February 21, 2013
சென்னை::பாலச்சந்திரன் கொலை புகைப்பட வெளியீட்டின் பின்னணியில் புலிகள் இயக்கத்தின் ஆதரவு சக்திகள் இருப்பதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது-

உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு பின்னால் புலிகள் ஆதரவு சக்திகள் இருக்கின்றன. மேலும் இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் ஏதுமில்லை. இலங்கை அரசு மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றங்கள் கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

பிரபாகரனின் மகன் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்களால் வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் திரிபுபடுத்தப்பட்டவையே.

பாதுகாப்புத் தரப்பினர் பிரபாகரனின் இளைய மகன் மீது தாக்குதல் நடத்தவில்லை. சிறிய பதுங்கு குழியிலிருந்தபோது இருதரப்பினருக்கு மிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டிருக்க வேண்டும;.

இவ்விடயம் குறித்து சர்வதேச விசாரணையொன்றுக்கான தேவை இல்லை. தமிழ் நாட்டிலுள்ள அரசியல் தலை வர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து அங்குள்ள உண்மை நிலைமையைப் பார்வையிட வேண்டும். ஈழம் என்ற ஒன்று தற்பொழுது இல்லை.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு கூறவேண்டிய அவசியம் இல்லை.

பொறுப்புவாய்ந்த பலம் மிக்க பிராந்திய நாடு என்ற நிலையில் இந்தியா செயற்படும் என்று நம்புவ தாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment