Monday, February 25, 2013

தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டும் - ரொஹான் குணரட்ன!

Monday, February 25, 2013
இலங்கை::தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டுமென பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.தமிழகத்தில்  புலிகளுக்கு ஆதரவு வலுப்பெற்று வருவதாகவும், தமிழ் மக்களை போராட்டங்களில் ஈடுபட உந்தும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுடடிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடடிக்கை எடுக்கத் தவறினால், அது இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் பரவக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையுடன் புலிகளுக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வந்ததாகவும், மீளவும் அந்த ஆதரவு வலுப்பெறத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் சில அரசியல் கட்சிகளுக்கு புலிகள் நிதி உதவி வழங்கி வருகின்றனா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கை மீது வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சாரங்களுக்கு பதில் பிரச்சாரங்களை இலங்கை ஊடக அமைச்சு மேற்கொள்ள வேண்டுமெனவும், அந்தப் பிரச்சாரங்கள் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரனுடன் பயங்கரவாத வன்முறைகள் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும்,  புலிகளின் வலையமைப்பு இன்னமும் வலுவாகவே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment