Monday, February 25, 2013
இலங்கை::தொழில் தேவைக்காக மனித உரிமை அமைப்புகளில் பணியாற்றுவதன் மூலம் மாத்திரம் ஒருவர் மனிதாபிமானவராக மாற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மனிதாபிமானிகள் அல்ல இனத்துரோகிகளாகும் சந்தர்ப்பமும் உள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானிக்கு இன, மத, குல பேதங்கள் இல்லை எனவும் அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்ற பேதமும் இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மனித உரிமை அமைப்புகள் என்றுக் கூறி சிலர், பல அமைப்புகளை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். அந்த அமைப்புகளை நோக்கும் போது, அவர்கள் நிறைவேற்றும் பணிகள் குறித்து புத்திசாலித்தனமாக சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment