Pages

Tuesday, February 19, 2013

இலங்கைக்குள் சட்டவிரோதமாக மத பிரச்சாரங்களைச் செய்து வருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் - பொதுபலசேனா!

Tuesday, February 19, 2013
இலங்கை::சுற்றுலா வீசாவில் இலங்கைக்குள் வந்து சட்டவிரோதமாக மத பிரச்சாரங்களைச் செய்து வரும் அனைவரையும் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதிக்கு முன் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

மகரகமவில் நடைபெற்ற பொதுபல சேனாவின் பொது மாநாட்டில் 'சரித்திர பிரசித்தி பெற்ற மகரகம தீர்மானம்" என்ற பெயரில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களை வேலைக்கு அனுப்புவது, இலங்கையின் நற்பெயருக்கு இழுக்காகும். மேலும், இதனால் நாட்டில் விரும்பத்தகாத சமூகப் பிரச்சிமைகள் பல ஏற்படுவதுடன் அந்நாடுகளில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கவும் நேரிடுகிறது பொதுபல சேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தில் பள்ளிகள் கட்டப்படுவது, வியாபாரங்களை கையகப்படுத்திக் கொள்வது, காணிகள் கொள்வனவு செய்யப்படுவது போன்ற நாட்டின் பாதுகாப்பிற்கும், இறைமைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு, நாட்டிற்குள் வரும் பெருந்தொகைப் பணம் குறித்து அரச கட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுபலசோனா அமைப்பு குறிப்பிடுகிறது.

மகரகம பிரதேசத்தில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற மாநாட்டில் 'சரித்திர பிரசித்தி பெற்ற மகரகம தீர்மானம்" என்ற பெயரில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரினால் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment