Tuesday, February 19, 2013
ராமநாதபுரம்::கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து, பிப்., 21 முதல், அகதிகள் வெளியே செல்ல, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனன் கூறியதாவது: பிப்., 24ம் தேதி நடைபெறும், கச்சத்தீவு விழாவிற்கு செல்வோர் விவரம், சேகரிக்கப்பட்டு வருகிறது. போலீஸ், புலனாய்வு, கஸ்டம்ஸ், இந்திய கடற்படை, மெரைன் போலீசார், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விழாவிற்கு, பயணிகளை ஏற்றி செல்லும் விசைப்படகுகள், நடுக்கடலில் விபத்து ஏற்படாத வகையில், பாதுகாப்புடன், தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கு, அகதிகள் யாரும் சென்று விடாதபடி கண்காணிக்கப்படுகிறது. பிப்., 21 முதல், மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து, அகதிகள் வெளியே செல்ல, "அவுட்பாஸ்' கொடுப்பது நிறுத்தப்படும். யாரும் முகாமை விட்டு வெளியே செல்லக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment