சென்னை::இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும். மற்றும் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலையை கண்டிக்காததை கண்டித்தும் சென்னையில் உள்ள மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிடப் போவதாக இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத் பிரிவு) அறிவித்து இருந்தது.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் எதிரே பைகிராப்ஸ் கார்டனில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காலை 11 மணி அளவில் இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்துரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் குமாரவேல் உள்பட ஏராளமானோர் முற்றுகை போராட்டத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை அண்டர்சன் ரோடு முனையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி மொத்தம் 45 பேரை கைது செய்தனர்,

No comments:
Post a Comment