Pages

Monday, February 18, 2013

ஜூடோவில் 10வது டான் பட்டத்தை பெற்ற ஒரே பெண்மணியான கெய்கோ ஃபுகுடா மரணம் அடைந்தார்!!!

Monday, February 18, 2013
லாஸ் ஏஞ்சல்ஸ்::ஜூடோ தற்காப்பு கலையின் உயரிய தகுதியான '10வது டான்' பட்டம் பெற்ற ஒரே பெண்மணியான கெகோ ஃபுகுடா சான்பிரான்சிஸ்கோ நகரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99.

1913ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிறந்த இவர், 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். திருமணம் கூட செய்துக் கொள்ளாமல் ஜுடோ கலைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் இவர் 1996ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறி, 1970ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் ஜுடோ பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்கினார்.

முதுமை காரணமாக கெய்கோ ஃபுகுடா 90 வயதான போதும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தினமும் ஜுடோ பயிற்சி செய்வதை விடவில்லை. 'திருமதி ஜுடோ' என்ற பெயரில் இவரைப்பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவின் ஜுடோ சம்மேளனம் கெய்கோ ஃபுகுடாவிற்கு ஜுடோ கலையின் உயரிய தகுதியான 10வது டான் பட்டத்தை வழங்கி கவுரவித்தது. இந்த பட்டத்தை பெற்ற உலகின் ஒரே பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில நாட்களாக உடல் நலக் குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கெய்கோ ஃபுகுடா, தனது 99வது வயதில் கடந்த 9ம் தேதி காலமானார்.

No comments:

Post a Comment