Pages

Sunday, December 9, 2012

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது!

Sunday, December 09, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் இந்த விசேட பிரதிநிதிகள் குழு கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான், நைஜீரியா, ரொமானியா, பங்களாதேஷ் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான நிரந்தர பிரதிநிதிகளே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இவர்களுடன் இத்தாலி, பிரேசில், தென் ஆபிரிக்க உள்ளிட்ட ராஜதந்திரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பிரதிநிதிகள் குழு, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment