Pages

Sunday, December 9, 2012

14 வருடங்களுக்கு முன் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 'லயன் எயார்' விமான பயணிகளின் உடற்பாகங்கள் தோண்டியெடுப்பு!

Sunday, December 09, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த இந்த வானூர்தி கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் திகதி காணாமல் போனது.

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜுன் மாதம் 13ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் மூலம் இது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

அதன்படி இந்த வானூர்தியின் பாகங்கள் மன்னார் - இரணைதீவு பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.

அனர்த்தங்களுக்கு உள்ளாகும் போது, இந்த வானூர்தியில் 48 பயணிகளும், 7 அதிகாரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் பலியான 31 பேரின் சடலங்கள் பூநகரி – கௌதாரிமுனையில் புதைக்கப்பட்டுள்ளதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் தகவல் வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த சடலங்களை தேடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment