Thursday, December 06, 2012
இலங்கை::இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கும் உண்மையான அத்தியாவசியம் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவுக்கு இருக்கவில்லை எனவும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் முன்வைக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அவர் ஆற்றியிருந்த உரை இதனை உறுதிப்படுத்தியது எனவும் இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் விருப்பம் இன்றியேனும் அவர் இந்த சட்டத் திருத்தத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார் என ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் வைத்து கொள்ளாது, மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு மாத்திரமல்ல நாட்டின் அனைத்து மாகாணங்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமையும்.
மத்திய மாகாணத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் குறித்து கொழும்பு தீர்மானிப்பது பலனை தராது. அது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மத்திய மாகாணத்திற்கு இருக்க வேண்டும். ஊவா மாகாணம் தொடர்பான தீர்மானங்களை கொழும்பில் இருந்து எடுத்த போதிலும் கொழும்பு இணையாக ஊவாக மாகாணம் முன்னேற்றமடையவில்லை.
அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பதுடன், மக்களுக்கு நெருங்கிய அதிகார கேந்திரம் ஏற்படுவதன் மூலம் அனைத்து மாகாணங்களும் முன்னேற்றமடையும். மாகாண சபை முறையில் காணப்படும் குறைப்பாடுகள் தீர்க்கப்படவேண்டும். அத்துடன் மாகாண சபை முறைமையில், தெளிவான அதிகார வரையறைகளை காணமுடியவில்லை எனவும் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment