Pages

Saturday, December 8, 2012

..பிரதம நீதியரசர் மீதான விசாரணை வெளிப்படையாக முன்னெடுக்கப்படவேண்டும் - அமெரிக்க தூதரகம்!

Saturday, December 08, 2012
இலங்கை::இலங்கை நீதித்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை கையாளப்படுகின்ற முறைமை தொடர்பில் ஆழ்ந்த கரிசணை கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் மீதான எந்தவொரு விசாரணையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படவேண்டும் என தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த செயற்பாடுக்ள உரிய ஒழுங்குமுறைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் சட்டத்தின் ஆட்சி முறைக்கு இணங்கியதாகவும் முன்னெடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசாங்கத்திடமும் பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேணை விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற விசேட தெரிவு குழுவிடமும் அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment