Friday, December 7, 2012

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) கண்காட்சி, மற்றும் அதன் செயற்திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது!

Friday, December 07, 2012
இலங்கை::நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) கண்காட்சி, மற்றும் அதன் செயற்திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடளாவிய ரீதியில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்திற்கு அமைவான கண்காட்சிகள் தொடர்பாகவும், பயனாளிகள் தெரிவு, பயிற்சிகள், வங்கிகள் ஊடான இலகுகடன் திட்டங்கள் இவற்றுக்கு ஊடாக பயனாளிகள் அடைந்து வரும் நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தவர்களுடனும் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் இவ்வாறான முன்னேற்ற செயற்திட்டங்களில் அமைச்சின் துறைசார்ந்த அதிகாரிகள் வழிகாட்டிகளாகவும், கண்காணிப்பாளர்களாகவும் இருந்து பயனாளிகள் பயனடையக் கூடிய வகையில் செயற்படும் அதேவேளை, அவர்களது தொழில் முயற்சிகளுக்கு ஏற்ப தொழில் உபகரணங்களை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், கித்துள்சார் உற்பத்திகளை மேம்படுத்தி அதனூடாகவும் துறைசார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே இம்மாதம் 27,28,29,30, ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற “சில்ப 2012” கண்காட்சி தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் துறைசார்ந்தோர்களுடன் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி மங்கலிக்கா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment