Friday, December 07, 2012
இலங்கை::சட்டம் சமமானது. குற்றம் யார் செய்திருந்தாலும் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்ற பாகுபாடு இன்றி தண்டனை கிடைக்கும். இதேவேளை நான் பழிவாங்கும் மனிதனும் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன வெளியேறும் நிலையத்திற்கு அருகாமையில் கொழும்பு சுற்றுவட்டப்பாதை கொட்டாவையினூடாக கொரவலப்பிட்டிய வரை மூன்று கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 'கெனோன்வின் ஆர்கோட்" என்ற உணவத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்
'சட்டத்திற்கு அமைவாகவே நாட்டில் சகல விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமன். இதில் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என யாரும் இருக்க முடியாது. யார் குற்றம் செய்திருந்தாலும் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் நாட்டின் நிர்வாகங்கள் நடைபெறுகின்றன. இதற்கு எதிராக செயற்படும் எந்த சக்திகளுக்கும் அரசாங்கம் ஒருபோதும் அடிப்பணியாது என்றார்




No comments:
Post a Comment