Wednesday,June,13,2012இலங்கை::பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என அஸ்கிரி பீடாதிபதி உடுகமஸ்ரீபுத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனால் அவப்பெயரும், அசௌகரியங்களுமேஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றிற்கு தெரிவாகாமல் பக்தர்களுக்கு ஆலோசனை வழங்க முடியும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை ஆட்சி செய்வது குறித்து பௌத்த விஹாரைகளில் மதத் தொண்டு ஆற்றிக்கொண்டே அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அஸ்கிரி மஹா விஹாரையின் 700ம் ஆண்டு பூர்த்தி நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதுபுத்தரக்கித தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடாமலேயே பௌத்த பிக்குகளினால்நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
No comments:
Post a Comment