Pages

Thursday, June 14, 2012

ஆர்.சம்பந்தன் கூற்றை மீளப்பெறவேண்டும் - பியசிறி!

Thursday, June, 14, 2012
இலங்கை::மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் 14 வது மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் வெளியிட்ட கூற்றுக்களை மீளப் பெறவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அவர் தமிழ் மக்களுக்காக ஒரு தனிநாடு அவசியம் என விடுத்த கோரிக்கை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

ஆர்.சம்பந்தன் தமது கூற்றுக்களை மீளப்பெறும் வரை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவித சந்திப்புக்களையும் நடத்தக் கூடாது என அந்த முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனின் நிலைப்பாட்டை கோருவதற்கு எமது செய்தி சேவை மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை.

எனினும், இது குறித்து அவரின் கருத்துக்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment