Thursday,June,14,2012இலங்கை::அவுஸ்திரேலியா செல்ல முனைந்தவர்களில் இந்தியர்கள் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படடுள்ளது!:-
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த போது நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 53 பேரில் இரண்டு இந்தியர்களும் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படடுள்ளது
இந்த 53 பேரும் ஹம்பாந்தோட்டையில் இருந்து 60 கடல்மைல் தொலைவில் கிழக்கு கடலில் வைத்து, இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்
கைதுசெய்யப்பட்ட அவர்கள் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 20 ஆ;ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது
இதேவேளை நேற்று முன்தினம் காலை புத்தளத்தில் வைத்து மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 11 பேர் ஒஸ்திரேலியா செல்ல முயற்சித்த நிலையில் கைதுசெய்யப்பட்டனர்
இதற்கிடையில் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் நீர்கொழும்பில் நேற்று இரவு 53 பேர் கைதுசெய்யப்பட்டனர்
இதில் 21 ஆப்கான் நாட்டவர்கள், 5 பாகிஸ்தானியர்கள், ஆகியோர் அடங்கியிருந்தனர்.
No comments:
Post a Comment