Wednesday,June,13,2012இலங்கை::பத்தரமுல்ல வங்கியொன்றில் கொள்ளையிடுவதற்கு சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் வடக்கில் பணியாற்றும் படைவீர்ர் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளார் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல செத்சிரிபாய அருகிலுள்ள வங்கியொன்றில் கொள்ளையிடுவதற்கு இன்று அதிகாலை 2.30 அளவில் குழுவொன்று முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் தப்பிச் செல்ல முயற்சித்த ஒருவரை துரத்திச் சென்ற பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த குறித்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொள்ளையிட மேலும் இருவர் வந்திருந்ததாகவும் அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
குறித்த வீதியினூடாக பயணித்த வாகனத்திலிருந்து ஒருவர் வழங்கிய தகவலுக்கு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த நபர் தொடர்பான பிரேத பரிசோனைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த சம்பவம் மேலதிக தகவல்களளை வெளியிட முடியுமென அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment