Pages

Wednesday, June 13, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 53 பேர் கைது!

Wednesday,June,13,2012
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த 53 பேர் ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை கடலில் இருந்து 60 கடல்மைல் தொலைவில் படகொன்றில் இருந்தபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

கைதுசெய்யப்பட்ட நபர்களில் இரண்டு இந்தியர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்கள் நேற்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் அடுத்து, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாபம், உடப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் கடந்த 10ஆம் திகதி மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது...

No comments:

Post a Comment