Friday, June 15, 2012

மட்டக்களப்பு ஆயித்தியமலை நெல்லூரில் கைக்குண்டுகள் மீட்பு!

Friday, June, 15, 2012
இலங்கை::மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் எனும் கிராமத்தில் 3 கையெறி குண்டுகளை ஆயித்தியமலைப் பொலிசார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகளை அந்தப்பகுதித் தோட்டத்திலுள்ள பெண்ணொருவருவர் கண்டு பொலிசாருக்குத் தகவல் கொடுத்ததின் பேரிலேயே தாங்கள் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று இந்தக் குண்டுகளை மீட்டதாக ஆயித்தியமலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.

புலிகள் இந்தப் பகுதிகளை விட்டுப் பின்வாங்கிச் செல்லும்போது கைவிட்டுச் சென்ற குண்டுகளாக இவை இருக்கலாம் என்று திரு பண்டார மேலும் தெரிவித்தார். ஆயித்தியமலை காட்டுப் பிரதேசங்களில் எல்ரீரீஈ இனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அவ்வப்போது பாதுகாப்புப் படையினராலும் பொலிசாராலும் மீட்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment