Wednesday,June,13,2012இலங்கை::சிறையிலுள்ள புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு நான்கு நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இதற்கமைய வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் முதற்கட்டமாக இரண்டு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதன்பின்னர் அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திலும் இந்த நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.
புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிறைக்கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அண்மையில் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 600க்கும் அதிகமான கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment