Wednesday,June,13,2012சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசரசமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோர முனைப்புக் காட்டுவோரை தடுக்க பல்வேறு நடவடிக்கைக் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
கடற்படையினர், புலனாய்வுப் பிரிவினர், காவல்துறையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க பாரியளவில் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமான முறையில் பலர் படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே அவுஸ்திரேலியாவில் இலங்கையர்கள் புகலிடம் கோருவதாக அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பொன்றின் உறுப்பினர் விக்டர்ராஜகுலேந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment