Sunday, April 8, 2012

புலிகளின் ஊடுருவல்::கடந்த வாரம் அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு நிலை::முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து மூன்று வருடங்கள் கூட முழுமையாக நிறைவு பெறாத நிலையில் மீண்டும் ஒரு அழிவை நோக்கிச் செல்ல மக்கள் தயாராக இல்லை!

Sunday, April, 08, 2012
இலங்கை::தமிழகத்திலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற நூற்றி ஐம்பது புலிகள் இலங்கையின் கிழக்குப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுத் தகவல் கள் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் சில வெளியிட்ட செய்தியால் கடந்த வாரம் அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு நிலை காணப்பட் டது. இது உண்மையா என்பதைக் கண்டறிய முன்னதாகவே அதனை இந்தியா மறு த்துவிட்டது. தமிழக பொலிஸ் கமிஷனரும் தனது மறுப்பைத் தெரிவித்துவிட்டார்.

இந்தச் செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பதை விடவும் இன்றைய சமா தானமானதொரு சூழலில் மீண்டுமொரு வன்முறைக்கு வித்திடும் ஒரு தூபம்போடும் செயலாகவே இதனை நோக்க வேண்டும். சமாதானம் ஏற்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதைப் பொறுக்க முடியாத சக்திகள் மூலம் இக்கதை வேண்டுமென்றே கட்டி விடப்பட்டிருக்க வேண்டும்.

பொறுப்பற்ற முறையில் கட்டிவிடப்பட்ட இக்கதை மூலமாக பாரிய பின் விளைவு களை நாடு எதிர்கொள்ள நேரிடும் என்பதை இதற்குக் காரணமானவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் நாட்டில் இன்று எப்பகுதியிலுமே பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை இல்லாத சூழல் காணப்படு கிறது. தற்போது புலிகள் ஊடுருவியிருக்கிறார்கள் எனும் செய்தியால் எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் பயம்மிக்கதொரு சூழல் ஏற்படும்.

அத்துடன் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக படையினரிடம் சரணடைந்த நிலை யில் புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிகள் அனைவர் மீதும் மீண் டும் வீணான சந்தேகம் ஏற்படும் நிலை உருவாகும். இச்செய்தி வெளியாகியதுமே கிழ க்கு மாகாணத்தில் அந்த நிலை ஏற்பட ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. அதில் தவறு இல்லை. ஏனெனில் இன்று நாட்டின் பாதுகாப்பே மிக முக்கிய மானது.

முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து மூன்று வரு டங்கள் கூட முழுமையாக நிறைவு பெறாத நிலையில் மீண்டும் ஒரு அழிவை நோக் கிச் செல்ல மக்கள் தயாராக இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனி ஆயுதப் போராட்டம் ஒன்றை நடத்தி அதன் மூலம் அரசியல் தீர்வுகாண அவர்கள் தயாராக இல்லை. முள்ளிவாய்க்காலில் பட்ட துன்பங்களுடன் அதற்கு மூட்டை கட்டப்பட்டு விட்டது. இனியும் ஆயுதப் போராட்டம் எனப் புறப்பட்டால் அது மக்கள் எவருமே சம்பந்தப்படாத ஒரு சிலரது தனிப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்யும் குறுகிய எண் ணம் கொண்ட போராட்டமாகவே நிச்சயம் அமைந்திருக்கும்.

இந்நிலையில் புலிகளின் ஊடுருவல் கதை வெறும் கட்டுக்கதையாகவே இருக்க வேண்டும். இன்றைய சூழலில் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய் யக்கூடியதொரு அரசியல் தீர்வையே எதிர்பார்த்துள்ளனர். அது கூடக் கிடைக்காவிட் டாலும் பரவாயில்லை. ஆனால் இனியுமொரு ஆயுதப் போராட்டம் தமிழ்ப் பிரதே சத்தில் தமிழருக்காகத் தேவையில்லை எனும் மன நிலையில் அம்மக்கள் உள்ளனர்.

அந்தளவிற்கு அம்மக்கள் பல துன்பங்களைச் சந்தித்து விட்டார்கள். இன்று வன்னி யில் உறவுகளை இழந்து இருக்க ஒரு சொந்தக் குடிசையும் இல்லாது பல குடும்பங் கள் தவிக்கின்றன. அதற்கொரு தீர்வு காணப்படாத நிலையில் இனியுமொரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தால் அம்மக்கள் கடலுக்குள் சென்று மாய்வதைத் தவிர வேறுவழியில்லை எனும் நிலையே காணப்படுகிறது. இந்த யதார்த்தமான உண்மை நிலையை இனியும் போலிப் போராட்டம் நடத்த முனைவோர் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனையும் மீறி எவராவது ஆயுதங்களை ஏந்தி முன்னர் போன்று மக்க ளுக்குள் மறைந்திருந்து படையினருடன் ஒளித்துப்பிடித்து தாக்குதல் நடத்தி ஓடி ஒளி வதாக செயற்பட முனைந்தால் அவர்களுக்கான பாடத்தை அம்மக்களே புகட்டுவார்கள்.

தமிழக மக்கள் அல்லது தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதாக இருந்தால் மெளனமாக இருப்பதே சிறந்தது. நன்மை செய்கிறோம் என எண்ணி இலங்கைத் தமிழரது வாழ்வுடன் மீண்டுமொரு முறை விளையாடி விடா தீர்கள். ஏற்கனவே தமிbழம் காண்பதாகக் கூறி இலங்கைத் தமிழ் இளைஞருக்கு இந் தியாவில் பயிற்சியளித்து இன்று அவர்களை இல்லாமல் ஆக்கியதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோன்று வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போன்று உங்களிடம் பயிற்சி பெற்ற அதே புலிகள் உங்களது நாட்டுத் தலைவரான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந் தியைக் கொன்றதை மறந்துவிடக் கூடாது. மீண்டும் அதேபோன்றதொரு நிலையை உருவாக்க இனியும் முயலக் கூடாது.

இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கு வந்து நல்லதோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினைக் காண வேண்டும் என தமிழர் தரப்பிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர இனியும் இளைஞருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி அவர்களை அழிந்து போகும் தவறான பாதையில் வழிநடத் தக் கூ¡டது. தமது நாட்டின் சர்வதேச நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இலங்கைத் தமிழ் மக்களை மீண்டும் பலிக்கடாவாக்க இந்தியா இனி முயலக் கூடாது.

ஏற்கனவே இந்தியா ஆரம்பித்து வைத்த இலங்கைத் தமிழருக்கான ஆயுதப் போராட்டம் எத்தகைய முடிவுக்கு வந்தது என்பது இன்று முழு உலகுக்குமே தெரியும். இந்தியா இனியும் அதுபோன்ற முட்டாள் தனமான செயலில் ஈடுபடாது என்பது இலங்கை தமிழரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்தியா தனது சுயநலனுக்காக செயற்படப் போகின்றதா அல்லது தன்னை நம்பி ஏமாந்து அழிந்து நிற்கும் இலங்கைத் தமிழினத்தின் நலனுக்காகச் செயற்படப் போகின்றதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment