Sunday, April, 08, 2012இலங்கை::புலம்பெயர் தமிழர்களுக்கு நண்பர்கள் யார்? எதிரிகள் யாரென்று தெரியவில்லை. புலிகளின் தோல் வியை ஒருவரின் தலையில் சுமத்துவதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிbழத்தை பெற்றுத்தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் தமிbழத்தை பெற்றுத்தர இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மருதமுனை தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவின் பின்னர், மருதமுனை மக்கள் மண்டபத்தில் சட்டத்தரணி எம். ரக்கீப் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
“ஜெனீவாவில் அரபு நாடுகளின் ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப் பெரிய விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொழும்பில் நடைபெற்று வரும் கம்பன் விழாவில் தொடக்கவுரை யாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்த போது, தமிழர்களுக்கு எதிராக ஜெனீவா விடயத்தில் செயற்பட்ட ரவூப் ஹக்கீம் கம்பன் விழாவில் உரையாற் றுவதா? அந்த விழாவினை தமிழர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று புலம்பெயர் தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
ரவூப் ஹக்கீமை மட்டும் அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கூடவே கம்பனுக்கும், இராமனுக்கும் ஏசினார்கள். கம்பராமாயணம் ஆபாசமானது, அசிங்கமானது என்றெல்லாம் தெரிவித்தார்கள்.
புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையில் சுமத்த வேண்டுமென்பதற்காக ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் ஆள்தேடும் விடயத்தில் நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். தமிழர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதற்கு தகுதியுடையவராகக் கருதப்படும் சுமந்திரனுக்கு கொடும்பாவி யாழ் – பல்கலைக்கழகத்தில் எரிக்கப்பட்டது.
ஜெனீவாவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பங்கு பற்றாது இருந்தமை சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன்.
அவசரப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படுகின்ற தீர்மானத்தால் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தை அடைய முடியாது.
இதனால், சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை துருவப்படுத்தப் போகின்றது என்று தான் ஜெனீவாவில் கூறினோம். அது தான் இன்று நடந்துள்ளது.
இரண்டு பக்கங்களிலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் எல்லாவற்றையும் கண் மூடித்தனமாக எதிர்த்துக் கொண்டி ருக்கின்றார்கள்.
உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிbழத்தை பெற்றுத்தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் அதனை பெற்றுத் தர இருப்பதாக புலம் பெயர் தமிழ் உணர்வாளர்கள் கூறிக் கொண்டிருக் கின்றார்கள்.
ஜெனீவாவில் இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை எல்லா சமூகங்களிடையேயும் தாக்கங்களை ஏற்படுத்தி இருந்தன.
இந்தியா இவ்வாறு நடந்து கொண்ட போதிலும், இந்தியா பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுகின்றது என்று கொக்கட்டிச்சோலையில் அரியநேத்திரன் கூறியுள்ளார். இந்தியாவில் இன்னமும் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமையால் இந்தியாவிற்குள், பெரிய விமர்சனங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment