Pages

Friday, April 13, 2012

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க!

Friday, April, 13, 2012
இலங்கை::தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமி;ழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முனைப்புக்களில் நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் ஈடுபட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான முனைப்புக்களை அரசாங்கம் எடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புத்தாண்டு காலத்திலேனும் நாடு பற்றிய சரியான சிந்தனை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

வரிச்சுமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, விவசாய உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment