Pages

Friday, April 13, 2012

அம்பிலிபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 10 பேர் காயம்!

Friday, April, 13, 2012
இலங்கை::அம்பிலிபிட்டி கல்மில்லார பிரதேசத்தில் இடம்பெற்ற கைக் குண்டுத் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் எட்டு பேர் ஆண்கள் எனவும், இரண்டு பெண்கள் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கிராம மக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைக் குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment