Monday, April 9, 2012

மலேஷியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மிஹின் ஏயார் விமானத்தின் சரக்கு பகுதியில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம்!

Monday, April, 09, 2012
இலங்கை::மலேஷியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மிஹின் ஏயார் விமானத்தின் சரக்கு பகுதியில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பான சேத விபரங்கள் குறித்து இதுவரையில் தெரியவரவில்லையென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நோக்கி புறப்பட்ட இவ்விமானம் தரையிறக்கப்பட்டதாக மிஹின் ஏயார் விமானத்தின் பேச்சாளர் டெய்லிமிரருக்கு கூறினார். தீ ஏற்படவில்லையெனவும் புகைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக இவ்விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஜகார்த்தா நோக்கி காலை 7.30 மணியளவில் புறப்பட்ட இவ்விமானம், புகைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக காலை 9.21 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் கூறினார். இவ்விமானத்தில் பயணித்த 202 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment