Monday, April 9, 2012

சங்கரராமன் கொலை வழக்கு: புதுவை கோர்ட்டில் ஜெயேந்திரர் ஆஜர்!

Monday, April, 09, 2012
புதுச்சேரி::காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இங்கு நீதிபதியாக இருந்த ராமசாமி முன்னிலையில் விசாரணை நடந்தது. இந்த நிலையில் நீதிபதி ராமசாமி வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருடன் டெலிபோனில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஒரு ஆடியோ கேசட்டும் வெளியானது. இதையடுத்து நீதிபதி ராமசாமி இந்த வழக்கை விசாரிக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனால் இந்த வழக்கின் விசாரணை தடைப்பட்டது. இதற்கிடையே நீதிபதி ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதியாக சி.எஸ்.முருகன் நியமிக்கப்பட்டார். இவர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 30-ந்தேதி சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ்.முருகன் முன்னிலையில் நடந்தது.

அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 24 பேரில் ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். இதனையடுத்து வழக்கின் விசாரணையை 9-ந் தேதிக்கு (இன்று) நீதிபதி ராமசாமி தள்ளிவைத்தார். அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி வழக்கின் விசாரணை இன்று (திங்கள்கிழமை) புதுவை கோர்ட்டில் நடந்தது.

ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட குற்றம்சாட்டப்பட்ட 24 பேரும் ஆஜர் ஆனார்கள்.

No comments:

Post a Comment