Pages

Thursday, April 12, 2012

கணவர் தாக்கியதில் கர்ப்பினி தாய் மரணம்!

Thursday, April 12, 2012
இலங்கை::வீரம்புகெதர, உஹுமீய பகுதியில் கதிரையால் தாக்கி தனது மனைவியை கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 31 வயதுடைய கர்ப்பினி தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று மாலை 4.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மதுகம இதிகொடவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வெலிமடை, வெளிமடைகம பிரதேசத்தல் காயங்களுடன் பாதையில் வீழ்ந்திருந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 33 வயதுடைய அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment