Pages

Thursday, April 12, 2012

பாரதிய ஜனதா கட்சி தலைவர் லால் கிருஷ்ணா அத்வானிக்கும் இலங்கை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புதுடில்லியில் சந்திப்பு!

Thursday, April 12, 2012
புதுடில்லி::பாரதிய ஜனதா கட்சி தலைவர் லால் கிருஷ்ணா அத்வானிக்கும் இலங்கை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் தொடர்பில் எதிர்கட்சிக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க,

"சந்திப்பு சிறந்த முறையில் அமைந்திருந்தது. இனப்பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை உள்ளது. அத்தீர்வு ஆணைக்குழு பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தொடர்பில் அரசுக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும்." எவ்வாறு ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

புனர்வாழ்வு நடவடிக்கைகளில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் அது குறித்து மே மாதம் பாராளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

"புனர்வாழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. அதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. சில இடங்கள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். மார்ச் மாதம் நான் வடக்கு சென்றபோது அது குறித்து அறிக்கை தயாரித்துள்ளேன். மே மாதம் பாராளுமன்ற அமர்வில் இப்பிரச்சினை தொடர்பில் தெளிவை பெற உள்ளோம்" என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

"வடக்கில் விரைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தாமதம் உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். எனினும் நாம் அதனை துரிதப்படுத்த வலியுறுத்துவோம்."

எல்.கே.அத்வானியை சந்தித்துவிட்டு கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment