Pages

Thursday, April 12, 2012

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குமார் குணரத்தனம் என்ற நொயல் முதலிகேவுக்கு தண்டப்பணம் செலுத்தும் வரையில் தடை!

Thursday, April 12, 2012
இலங்கை::குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குமார் குணரத்தனம் என்ற நொயல் முதலிகேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தை செலுத்தும் வரையில், அவருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது என்று இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நிர்வாகி ச்சூலானந்த பெரேரா அதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குமார் குணரத்தினம் என்ற நொயல் முதலிகே அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்து, தமது வீஸா காலம் நிறைவடைந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்காக அவருக்கு 40 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ச்சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

முற்போக்கு சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்ணம் அவுஸ்ரேலியாவில் இருந்து நொயல் முதலிகே என்ற பெயரில் இலங்கை வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இலங்கை வந்த அவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment