Pages

Saturday, April 7, 2012

பயங்கரவாதத்தை ஒழித்து அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது -இலங்கை!

Saturday, April, 07, 2012
இலங்கை::2005ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதியன்று இலங்கையின் நிறை வேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மக்களின் பேராதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட திரு மஹிந்த ராஜபக்ஷ அன்றையதினம் முதல் நாட்டின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார்.

ஜனாதிபதி பதவியை 2005ல் ஏற்றுக்கொண்டவுடன் மஹிந்த ராஜபக்ஷ அவர்க ளுக்கு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுக ளையும், இடைத்தங்கல் வீடுகளையும் அமைத்துக்கொடுப்பதுடன் அவர்க ளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டிய பெரும் பணி காத்திருந் தது. அதனையும் மிகவும் வெற்றிகரமான முறையில் ஓரிரு ஆண்டுகளில் நிறைவேற்றி முடித்துவிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அடு த்து நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் தனது முழுக் கவனத்தையும் செலு த்தினார்.

பல்லாண்டு காலம் நீடித்துக்கொண்டிருந்த பயங்கரவாத யுத்தத்திற்கு தீர்க்கமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தில் ஜனாதிபதி அவர்கள் அடுத்து, எல்.ரீ.ரீ.ஈ.யை சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு அழை த்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகள் பெரும் பாலும் வெளிநாடுகளிலேயே இடம்பெற்றன. எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கோரிக்கைக ளுக்கு திறந்த மனத்துடன் தீர்வுகளை ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன் ஜனா திபதி அவர்கள் செயற்பட்ட போதிலும் அவருக்கு எல்.ரீ.ரீ.ஈ. தரப்பிலிருந்து அந்தளவுக்கு ஒத்துழைப்போ ஆதரவோ கிடைக்கவில்லை.

பேச்சுவார்த்தைகளின் போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எல்.ரீ.ரீ.ஈ.யினர் ஏதா வது சாக்குப் போக்குக் கூறி பேச்சுவார்த்தைகளை முறித்துவிட்டுச் சென்ற னர். இவ்விதம் ஜனாதிபதி அவர்கள் நீட்டிய நேசக்கரத்தை எல்.ரீ.ரீ.ஈ. தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அகங்காரப்போக்கில் தட்டிக்கழித்துவிட்டு போர்மூலமே எமது உரிமைகளை நாம் பெறுவோம் என்று மார்தட்டிக் கொண்டு பேச்சுவார்த்தைகளிலிருந்து நிரந்தரமாகத் தமது அணியினரை வெளியேறச் செய்தார்.

அதையடுத்து யுத்தம் நடந்துகொண்டிருந்தது. இந்த யுத்தத்தின் போது எல்.ரீ.ரீ. ஈ.யினர் இலங்கை இராணுவத்துடன் மோதுவதற்குப் பதில் எல்லைப்புற கிராமங்களுக்கு ஊடுருவிச் சென்று அப்பாவி மக்களை துடிதுடிக்கப் படு கொலை செய்தனர். அறந்தலாவை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்ற கொடூரமான கொலைகள் ஆகியவற்றின் மூலம் எல்.ரீ.ரீ.ஈ. யுத் தத் தீர்விலேயே அதிக விருப்பம் காட்டுவதை தனது மனிதாபிமானமற்ற செயற்பாட்டின் மூலம் எடுத்துக்காட்டியது.

இறுதியில் மாவில்லாறு நீர்ப்பாசனக் கதவுகளை மூடி, விவசாயிகளுக்கு நீர்விநி யோகத்தை எல்.ரீ.ரீ.ஈ. தடைசெய்ததையடுத்து வேறு வழியின்றி இலங்கை இராணுவம் யுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டது. இறுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியன்று எல்.ரீ.ரீ.ஈ.யை யுத்தமுனையில் அரசாங்கம் படு தோல்வியடையச் செய்ததையடுத்து நாட்டில் மீண்டும் சமாதானமும் அமை தியும் நிலைகொண்டது.

அதற்குப் பின்னர் கடந்த இரண்டாண்டு காலத்தில் அரசாங்கம் அபிவிருத்தி க்கே முக்கியத்துவம் அளித்து நாட்டில் மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், பால ங்கள் ஆகியவற்றை அமைத்ததுடன், யுத்தத்தினால் சின்னாபின்னமடைந்த பாடசாலை, ஆஸ்பத்திரி மற்றும் அரசாங்கக் கட்டடங்களை புனர்நிர்மாணம் செய்து யுத்தத்தினால் தங்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களு க்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணியையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

அமைதியான சூழ்நிலையில் 2010 ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதியன்று நட த்தப்பட்ட 14 வது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவடைந்து நாளையு டன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1947 ஆண்டிலேயே இலங்கை யில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. 30 ஆண்டுகால பயங்கர வாத யுத்தத்தின் பின்னர் 2010ம் ஆண்டிலேயே நாட்டிலுள்ள சகல 22 மாவ ட்டங்களிலும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144 ஆச னங்களைக் கைப்பற்றி சாதனையை ஏற்படுத்தியது. இந்த 144 ஆசனங்க ளில் 127 ஆசனங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றது.

2010ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிப்பதில் 1 கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். இத்தேர்தலில் 7 ஆயி ரத்து 620 வோட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இத்தேர்ததில் 11 ஆயிர த்து 155 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நாவலப்பிட்டி தொகுதியில் மோசடி இடம்பெற்றது என்ற சந்தேகத்தின் பேரில் அந்தத் தொகுதிக்கான தேர்தல் சூனியமாக்கப்பட்டு அத்தேர்தல் ஏப்ரல் 20 ஆம் திகதி அன்று கண்டி மாவட்டத்தில் புதிதாக பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இவ்விதம் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றக் கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இது இலங்கை வரலாற்றில் 7வது பாராளுமன்றமாகும்.

இந்த 7வது பாராளுமன்றத்தில் சபாநாயகராக தென்னிலங்கையைச் சேர்ந்த சமல் ராஜபக்ஷ தெரிவானார். இவர் அரசாங்கக் கட்சியினாலும், எதிர்க் கட்சியினாலும் ஏகமனதாகத் தெரிவானார். இவருடைய பெயரை பிரதமர் டி.எம். ஜயரட்ண முன்மொழிய, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கரு ஜெயசூரிய வழிமொழிந்தார்.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணி சார்பில் போட்டியிட்ட பசில் ராஜபக்ஷ ஆகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளைக் பெற்றார். அவருக்கு 42 இலட்சத்து 5 ஆயி ரத்து 861 விரும்பு வாக்குகள் கிடைத்தன. இலங்கையில் இந்தத் தேர்தலில் விருப்பு வாக்குகளில் கூடுதலான வீதாசாரத்தைப் பெற்றவர் ஹம்பாந்தோ ட்டை தொகுதியில் போட்டியிட்ட திரு. நாமல் ராஜபக்ஷ ஆகும். இவ ருக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 566 விருப்பு வாக்குகள் கிடைத்தன.

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் 1947, 1952, 1956, 1960 மார்ச் 19, 1960 ஜூலை 20, 1965, 1970, 1977, 1989, 1994, 2000, 2001, 2004 ஆகிய வருடங் களில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக் கது.

1947 இல் காலிமுகத்திடலிலுள்ள பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற பாரா ளுமன்றக் கூட்டத்தொடர் 1982 ஏப்ரல் 29 ஆம் திகதி ஸ்ரீஜெயவர்த்தன புரவிலுள்ள புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடருக்கு மாற்றப்பட்டது.

No comments:

Post a Comment