Pages

Wednesday, April 11, 2012

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Wednesday,April,11,2012
வாஷிங்டன்::அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் சோதனையில் அது பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் தூதரகத்தின் பாத்ரூமில் குண்டு இருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்த நேரத்தில் தூதரகத்தில் 130 முதல் 140 பேர் இருந்தனர். உடனே அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் பதறிப்போன தூதரக ஊழியர்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த உடனே போலீசார் தூதரக அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை மேற்கொண்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அது பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்தது. தூதரகம் உள்ள பகுதியில் குண்டுகள் ஏதாவது உள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment