Wednesday,April,11,2012இலங்கை::மனித உரிமை தொடர்பாக இலங்கைக்கு யாரும் கற்றுத் தரத் தேவையில். ஏனெனில் எமது கலாச்சாரம் மனித உரிமையோடுபின்னிப் பிணைந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை அடிமட்டத்திலுள்ள மக்களும் அனுபவிக்க வழிவகை செய்வதே எனது அரசாங்கத்தின் இலக்காகும்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குமக்கள் எமக்கு வாக்குறுதி அளித்தார்கள். அதனை நாம்நிறைவேற்றியது போல ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தற்போது மக்கள் எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார்கள். அதனையும் நாம் நிறைவேற்றுவோம் என்றார்.
வடகிழக்கு வளர்ச்சிக்கு கூடுதல் நிதி
எத்தகைய பிரசாரங்களை மேற் கொண்ட போதும் அரசாங்கம் வடக்கு, கிழக்கு வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு மட்டும் 260 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம் என சகல துறைகளிலும் பெரும் நிதியினை அரசாங்கம் செலவிட்டு அத்துறைகளை முன்னேற்றி வருகிறது. எனினும் எமது அரசியல்வாதிகளுக்கு இது எதுவும் தெரிவதில்லை. அவர்கள் தவறான தகவல்களையே சர்வதேசத்திற்குத் தெரிவிக்கின்றனர்.
தேவையில்லை வெளிநாட்டுத் தீர்வு
30 ஆண்டுகால பிரச்சினைகளுக்கு ஒரு இரவில் தீர்வு காண முடியாது. இதற்கான தீர்வை இறக்குமதி செய்யவும் முடியாது. வெளிநாட்டுத் தீர்வுகள் பற்றி எங்களுக்குத் தெரியும். அவை எதுவுமே நிரந்தரமானதல்ல. வெளிநாட்டுத் தீர்வுகளுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவை தற்காலிகமானவை. பல நாடுகள் இதற்கு உதாரணமாகவுள்ளன.
ஏனைய நாடுகளை விட மனித உரிமையைப் பேணுவதில் இலங்கை முன்னிலையில் உள்ளது. மனித உரிமை என்பது எமது கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. இதில் யாரும் எங்களுக்கு கற்றுத் தரத் தேவையில்லை என்றார்.
No comments:
Post a Comment